மசூதியில் இஃப்தார் நோன்பு திறக்க அனுமதியில்லை: கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடு
கரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த ரமலான் காலத்தில் மசூதியில் தொழுகைக்கு மட்டுமே வர வேண்டும் என்றும்நோன்பு திறக்க முஸ்லிம்கள் அனுமதி இல்லை என்று கர்நாடக அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில்
60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மசூதிக்கு வருவதைத் தவிர்த்து, வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டும்.
சமூக விலகலைக் கடைப்பிடித்து,முகக்கவசம் அணிந்து தொழுகையை மசூதியில் நடத்த வேண்டும்.
மசூதிக்குள் நுழையும் அனைவரையும் உடல்வெப்ப பரிசோதனை செய்து, சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தப்படுத்தியபின் அனுமதிக்க வேண்டும்.
ரமலான் காலத்தில் இஃப்தார் நோன்பு திறக்க அனுமதியில்லை.
முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே மாலை நேரத்திலும், அதிகாலையிலும் நோன்பு திறந்துகொள்ள வேண்டும். மசூதிக்கு தொழுகைக்கு மட்டுமே வர வேண்டும்.
Source:
Tags: இந்திய செய்திகள்