Breaking News

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க 4 மாதத்திற்கு அனுமதி - அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.!

அட்மின் மீடியா
0

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க தமிழக அரசு தற்காலிக அனுமதி அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு. 

 


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில்  அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு பங்கேற்றிருந்தனர். 

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவின்படி, ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் மீண்டும் வழங்கப்படும்

தேவைப்பட்டால் மீண்டும் கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

 

 

 
 
 
   


 
 
 
 
 
 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback