இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு அதிரடி தடை : அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை
சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த அமைப்புக்களை தடை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அவரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.
இதன்படி தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களின் விபரங்கள்:
ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ)
சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ)
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ)
ஜம்மியதுல் ஹன்சாரி துன்னத்துல் முகமதியா (JASM)
தாருல் அதர் @ ஜம் உல் அதர் இலங்கை இஸ்லாமிய மாணவ அமைப்பு / ஜமியா (SLISM)
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு (ISIS)
அல் குவைதா (AL-Qaeda) அமைப்பு
சேவ் த பர்ல்ஸ் அமைப்பு (Save the pearls)
சூப்பர் முஸ்லிம் அமைப்பு (Super Muslim)
ஏற்கனவே புலம்பெயர்ந்த 7 தமிழர் அமைப்புக்களும் 338 தனிநபர்களுக்கும் இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மாதம் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் "நிகாப்" முறைக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்