Breaking News

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது : வதந்திகளை நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு கிடையாது 

 


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த  9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. 

இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்வதாக செய்திகள் வெளியாகின. 

இது குறித்து பள்ளி கல்விதுறை அதிகாரிகள் :

தமிழக பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. அதனால் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback