Breaking News

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பட்டியலும் வெளியாகிறது

அட்மின் மீடியா
0

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். 


மேலும் கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று அந்த பட்டியலும் வெளியிடப்படுகிறது. 

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வருகிற 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. 

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 25 தொகுதிகள், 

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகளுக்கு தலா 6 தொகுதிகள், 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3தொகுதிகள்,  

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள்

மனிதநேய மக்கள் கட்சிக்கு  2தொகுதிகள், 

தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக இன்று காலை அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து இன்று மாலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

 

Tags: தமிழக செய்திகள்

Share this