Breaking News

காங்கோ நாட்டில் தங்க மலை: அள்ள அள்ள தங்கம் மக்கள் போட்டி போட்டு தோண்டி எடுத்து சென்ற மக்கள்

அட்மின் மீடியா
0

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் இருக்கும் ஒரு மலையில் உள்ள மண்ணில் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். 

 


இந்த செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு மண்ணை தோண்டி தங்களால் முடிந்த வரை தங்கத்தை அள்ளி எடுத்துக் கொண்டனர்.

இதனிடையே இந்த தகவல் அரசுக்கு தெரிந்தவுடன் மலையில் மண்ணை தோண்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். 

இந்த மலை முழுவதிலும் தங்கத் தாது இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே மலையை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அதற்குள் மக்கள் தங்களுக்கு வேண்டிய அளவிற்கு தங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 




Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback