Breaking News

முதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

அட்மின் மீடியா
0

புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னனு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும்  இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



அதன்படி 13.03.2021 (சனிக்கிழமை) மற்றும் 14.03.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் ( சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



இந்த முகாமில் வாக்காளர்கள்  தங்களது மின்னனு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்லிடப்பேசி அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback