பா.ஜ தலைவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரகசியமாக சந்தித்த புகைபடம் உண்மையா?
நியூஸ் 7 தொலைகாட்சியில் 2017-ம் ஆண்டு சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றமாக இன்றைய தமிழக அரசியலில் திரைத்துறையினரின் வெற்றி… சாத்தியம்? சாத்தியமில்லை ? ” எனும் தலைப்பில் வெளியானது
அந்த பட்டிமன்றத்தில் சீமான், வானதி ஸ்ரீனிவாசன், அர்ஜுன் சம்பத், நாஞ்சில் சம்பத், மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடத்தில் உள்ள அதே உடையைதான் அந்த பட்டிமன்றத்திலும் சீமான் , வானதி, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் அணிந்துள்ளார்கள்
அதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் அந்த பட்டிமன்ற நிகழ்ச்சி ஆரம்பத்திலோ, நடுவிலோ, அல்லது முடிந்தபிறகோ டீ சாப்பிடும் நேரத்தில் எடுத்த புகைபடம் என்றுதான் அதனை எடுத்து கொள்ளமுடியும்
https://www.youtube.com/watch?v=_N-TILUd49g
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
