தண்ணீர் குடிக்க கோவிலுக்குள் வந்த முஸ்லீம் சிறுவனை அடித்தவர் கைது !
உபி மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தண்ணீர் குடிப்பதற்காக இந்து கோவிலுக்குள் சென்ற சிறுவனை ஒருவர் தாக்கி எடுக்கப்பட்ட 24 நொடிகள் கொண்ட வீடியோவில் ஒருவர்
உன் பெயர், தந்தை பெயர் என்ன எனக் கேட்டதற்கு அந்த சிறுவன் தன் பெயர் ஆசிப் என்றும், தந்தை பெயர் ஹபீப் என்றும் சிறுவன் கூறுகிறான். கோவிக்குள் என்ன செய்கிறாய் எனக் கேட்டதற்கு தண்ணீர் குடிக்க வந்தாக பதில் கூறும் போதே சிறுவனை பயங்கரமாக தாக்குகிறார் கீழே தள்ளி மிதிக்கின்றார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்
அதே பகுதியை சார்ந்த சேர்ந்த ஷீரங்கி நந்தன் யாதவ் மற்றும் அவரின் மகன் அஸ்வனி குமார் யாதவ் என அடையாளம் காணப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சிறுவனை அடித்தவரை கைது செய்து உள்ளதாக காவல் துறை தெரிவித்து உள்ளது.
उपरोक्त वीडियो का तत्काल संज्ञान लेकर टीम गठित कर मार पिटाई करने वाले व्यक्ति- श्रृंगी नंदन यादव पुत्र अश्वनी कुमार यादव निवासी गोपालपुर थाना संवारा भागलपुर बिहार को हिरासत में लिया गया एवं मुकदमा पंजीकरण/वैधानिक कार्रवाई संबंधी प्रक्रिया प्रचलित की गई pic.twitter.com/MVEXfqwnJ6
— GHAZIABAD POLICE (@ghaziabadpolice) March 12, 2021
Tags: இந்திய செய்திகள்
