Breaking News

யார் யார் தபால் வாக்கு அளிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது  அதற்க்கு வரும் 12-ம் தேதி முதல் 16ம் தேதி வரை தபால் வாக்கிற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

 


80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளவர்கள் வரும் 12-ம் தேதி முதல் 16ம் தேதி வரை தபால் வாக்கிற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

 

தபால் வாக்களிக்க விரும்புவோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் படிவம் 12D ஐ மார்ச் 16-க்குள் தரலாம். தபால் வாக்களிக்க விருப்பமில்லை எனில் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.








Tags: தமிழக செய்திகள்

Share this