Breaking News

கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் தர தடையில்லை - உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதை தடுப்பது தற்போது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 



திருச்செந்தூரை  சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்  எனபவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் 

சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவுப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில், அந்தக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே போட்டியிட முடியும். கூட்டணி கட்சியாக இருந்தாலும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த சின்னத்தில் போட்டியிட முடியாது. அப்படி போட்டியிட்டால் அது  சட்டவிரோதம். என  தனது  மனுவில் கூறியுள்ளார். .

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கும் பணி நிறைவடைந்து உள்ளதால், இந்த தேர்தலில் மனுதாரர் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என தேர்தல ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது

அதன்பின்பு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணி வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை தடுப்பது தற்போது சாத்தியமில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும், மனுதாரர் கோரிக்கை குறித்து விரிவான பதில் மனுவை தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அடுத்தடுத்த தேர்தலில் இது அமல்படுத்துவது சாத்தியமா என்பதை தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க எனவும் உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது 

Tags: தமிழக செய்திகள்

Share this