Breaking News

வங்கியால் ஏற்படும் பிரச்னைகளுக்கு வாடிக்கையாளர்கள் வங்கி மீதும் வங்கிஅதிகாரிகள் மீதும் புகார் அளிப்பது எப்படி?

அட்மின் மீடியா
0

வங்கியால் ஏற்படும் பிரச்னைகளுக்கு வாடிக்கையாளர்கள் வங்கி மீதும் வங்கிஅதிகாரிகள் மீதும் புகார் அளிப்பது எப்படி?



வங்கி தீர்ப்பாயம்(ஓம்பட்ஸ்மேன்) என்பது வங்கி சேவைகள் குறித்து வாடிக்கையாளர்கள் செய்யும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் சேவை. வங்கி தீர்ப்பாயம்  வங்கி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகிறது. 

வங்கி வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்களை ஏற்று அவற்றை சரி செய்கிறது.  மத்திய ரிசர்வ் வங்கியால் நியமனம் செய்யப்பட்ட மூத்த அதிகாரிகள் இந்த அமைப்பில் இருக்கின்றனர். 

இவர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை ஏற்று அவர்களின் புகார்களை சரி செய்ய ஆவன செய்கின்றனர். 

இந்த அமைப்பு அனைத்து வர்த்தக வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகிய அனைத்து வகை வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை முதலில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.  அதன் பேரில் ஒரு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வங்கி குறைதீர்ப்பாயத்தின் கீழ்கண்ட முகவரியில் மேல்முறையீடு செய்யலாம். 

  எப்படி புகார் அளிக்கலாம்

புகார் அளிப்பவரின் பெயர், முகவரி 

மற்றும் எந்த வங்கியின் மீது புகார் தரப்படுகிறதோ அந்தக் கிளையின் பெயர், 

முகவரி, 

புகாருக்கு ஏதேனும் ஆதாரம் இருப்பின் அதனையும் குறிப்பிடவேண்டும்.

உங்கள் புகார்களை, தபால், மின்னஞ்சல் அல்லது ஆன்லைன் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்.

 
வங்கி குறைதீர்ப்பாளர், 

வங்கி குறைதீர்ப்பாயம் 

ஆஃபிஸ் ஆஃப் தி பேங்கிங் ஆம்புட்ஸ்மேன்
இந்திய ரிசர்வ் வங்கி (2-வது தளம்), 

 16, ராஜாஜி சாலை, 

சென்னை-600 001 


ஆன்லைன் மூலமாக புகார் அளிக்க  http://cms.rbi.org.in/ 


இமெயில் மூலம் புகார் அளிக்க  bochennai@rbi.org.in


மேலும் விவரங்களுக்கு  

தொலைபேசி: 

044 – 2539 5964

044 2539 9170,  

044 2539 9159,  

044 2539 9158,


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback