தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவுகள் முழு விவரம்
நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும்' என, புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய, கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
புதிய தலைமுறை, 'டிவி' மற்றும் ஏ.பி.டி., ஆய்வு நிறுவனம் இணைந்து, 'தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்' என, பிப்., 18 முதல், மார்ச், 15 வரை ஆய்வு நடத்தியது.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு,
எடப்பாடி பழனிசாமி - 28.33 %
ஸ்டாலின் - 37.51 %
கமல் - 6.45 %
சசிகலா - 1.33 %
சீமான் - 4.93 %
என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக கருத்துக் கணிப்பில், .தி.மு.க., கூட்டணி, 151 - 158 இடங்கள்; அ.தி.மு.க., கூட்டணி, 76 - 83 இடங்களிலும் வெற்றி பெறும் என, கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
source நன்றி புதியதலைமுறை
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி: புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவுகள்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 22, 2021
விரிவாக அறிய > https://t.co/1imb3YSuqw#TNElection2021 | #PTprePollSurvey2021 | #DMK | #AIADMK | @mkstalin | @EPSTamilNadu | #TNAssemblyElection2021 pic.twitter.com/uJpF3KevKM
Tags: தமிழக செய்திகள்