யார்-யாருக்கு தபால் ஓட்டு? தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சட்டமன்ற தேர்தலில் யாரெல்லாம் தபால் வாக்கினை செலுத்தலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
அதன்படி,
- ரெயிலை இயக்குபவர்கள்
- உதவி பைலட்
- மோட்டார் மேன்
- கார்டுகள்,
- டிக்கெட் பரிசோதகர்கள்
- ஏ.சி. பெட்டி உதவியாளர்கள்,
- ரெயில்வே பாதுகாப்பு படை பணியாளர்கள்,
- வாக்குப்பதிவு அன்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஊடகத்தினர்,
- விமான போக்குவரத்து ஊழியர்கள்
- கப்பல் போக்குவரத்து ஊழியர்கள்
தமிழக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, வாக்குப்பதிவு அன்று பணியில் இருப்பவராக சான்றளிக்கப்பட்டு, அந்த பணியின் மூலம் அவரால் தனது சொந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார் எனவே அவர் தபால் ஓட்டளிப்பதற்கு தகுதியுள்ள நபராக கருதப்படுவார்.
அந்த வகையில் வாக்குச்சாவடிகளில் ஆஜராக முடியாத அவர்கள், தபால் மூலம் வாக்களிக்க விரும்பினால் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் 12-டி விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.அதன்பிறகு அவர் தபால் வாக்கு அளிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்
