Breaking News

திமுக ஆதரவை திரும்ப பெறவில்லை..! தகவல் தவறானது! – தமிமுன் அன்சாரி விளக்கம்!

அட்மின் மீடியா
0
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக வெளியான தகவல் தவறானது என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
 

 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிட கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. 
 
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டணியிலிருந்து விலகியதுடன் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் பல முண்னனி தொலைகாட்சிகளிலும் செய்திகளிலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர்  தமிமுன் அன்சாரி  அவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக செய்திகள் வந்தது
 
இந்நிலையில் தமிமுன் அன்சாரி அவர்கள் உடனடியாக இது குறித்து மறுப்பு செய்தியினை வெளீட்டுள்ளார்
 
அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் நிலைபாடு குறித்து நாளை சென்னையில் நடைபெறும் தலைமை செயற்குழுவில்  முடிவெடுக்கப்படும் என பொதுச் செயலாளர்  மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை கொடுத்துள்ளார்.

சில ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

மஜக தலைமையகம்
09.03.2021

ஆதாரம் 

 

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback