வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள்.. இன்று மாலை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்
தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது 16 வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது மேலும் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பிக்கபட்டு வேட்புமனு தாக்கல் 19ம் தேதியுடன் முடிவடைந்தது
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாத நபர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை இன்று மாலை 3 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இன்று மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பிறகு மாலையில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
தேர்தல் குறித்த அறிவிப்பு வருமாறு:
வேட்பு மனு தாக்கல் தேதி: மார்ச் 10
வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20
வேட்புமனு திரும்பப் பெற இறுதித் தேதி: மார்ச் 22
வாக்குப்பதிவு: ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை: மே 2
அதில் உங்கள் தொகுதியில் போட்டியிடுபவர்கள் யார் யார்!!!
வேட்பாளர்களின் மொத்த சொத்து விபரங்கள்,
வேட்பாளரது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள்
வேட்பாளர் மேல் உள்ள குற்ற வழக்குகள் விவரம்
என அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் தொகுதியின் வேட்பாளர் பற்றி தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2021/03/blog-post_527.html
Tags: தமிழக செய்திகள்
