அதிர்ச்சி !மீண்டும் கேஸ் சிலிண்டர் விலை ரூ 25 உயர்வு!
வீட்டில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் சிலிண்டர் விலை 710 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி 25 ரூபாய் உயர்ந்து 735 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. ரூ.50 அதிகரித்து 785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் பிப்ரவரி மாதகடைசியில் 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 810 ரூபாய்க்கு விற்க்கபட்டது .பிப்ரவரி மாதம் மட்டும் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்ந்தது.
இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதனால் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.835க்கு விற்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்