Breaking News

மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு: ஊரடங்கை மீறினால் கடும் அபராதம்!

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு: ஊரடங்கை மீறினால் கடும் அபராதம்!

 


மகாராஷ்டிரத்தில் இன்று முதல் அமல்படுத்தப்படவுள்ள இரவுநேர பொதுமுடக்கத்தை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் முன்னணியில் உள்ளன.

இந்த நிலையில், நேற்று (26ந்தேதி) மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது  அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 28 இரவு முதல் மகாராஷ்டிரத்தில் இரவுநேர பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட உத்தரவில்,இன்று நள்ளிரவு முதல் இரவு 8 மணிமுதல் காலை 7 மணிவரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது. 

கடற்கரை, உணவகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்கள் இரவு நேரத்தில் மூடப்படும்.பொதுமுடக்கத்தை மீறுபவர்களுக்கு ரூ.1,000, முகக்கவசம் அணியாவிடில் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

 


Tags: இந்திய செய்திகள்

Share this