திமுக கூட்டணியில் விசிக க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
அட்மின் மீடியா
0
திமுக கூட்டணியில் உள்ள விசிக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்