Breaking News

ஏப்ரல் 3ம் தேதி முதல் பைக் பேரணிக்கு தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு

அட்மின் மீடியா
0

ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

 


தமிழகத்தில் சட்டமன்ற பொதுதேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் எந்த இடத்திலும் பைக் பேரணிகளை அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அதன்படி, ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் பிரச்சாரம் முடிவடைகிறது. 

ஆனால் இந்த முறை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னரே மோட்டார் சைக்கிள் பேரணிகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது 

 

 தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ உத்தரவை படிக்க

https://eci.gov.in/files/file/13133-ban-on-bike-rallies-during-72-hours-before-the-date-of-poll-and-poll-day-in-the-all-poll-going-constituencies/

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback