Breaking News

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி: 22 நாடுகள் ஆதரவு., 11 நாடுகள் எதிர்ப்பு.! முழு விவரம்....

அட்மின் மீடியா
0
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பில் அதிக ஆதரவு பெற்று நிறைவேறியுள்ளது.



கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்து ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரனை நடத்த இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது.

அந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடந்தது அதில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரித்தும், 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளது. 

மேலும் வாக்கெடுப்பில் இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனோஷியா உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், கியூபா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பிஜி,  இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது.


.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback