ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடல் என்பது வதந்தி: யாரும் நம்பாதீங்க: பள்ளிக்கல்வித்துறை
அட்மின் மீடியா
0
ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்
ஏப்ரல் 1-ஆம் தேதியோடு பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் பொதுமக்களிடையே பரவி வருகிறது.எனவே, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும், பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அன்றைக்கு மட்டும் அனைத்து பள்ளிகள் இயங்காது, அதன்பிறகு பள்ளிகளை நடத்த எந்த இடையூறும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்