கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய ஆட்சேபனை இல்லை என அறிவிப்பு
கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய ஆட்சேபனை இல்லை என்று அரசானையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, அவசர நிலை பிரகடனத்தின் போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதால், கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 4.8 வரையறை எல்லையில் உள்ள 14 கிராமங்களின் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என நிலா கமிட்டியின் பரிந்துரையின் பேரில் மாவட்ட நிர்வாகம் அரசாணை வெளியிட்டது.
மாமல்லபுரம்,
சதுரங்கப்பட்டினம்,
கொக்கிலமேடு,
மெய்யூர்,
எடையூர்,
குன்னத்தூர்,
நெய்குப்பி,
கடும்பாடி,
புதுப்பட்டினம்,
ஆமைபாக்கம்,
நல்லூர்,
விட்டிலாபுரம்,
உள்ளிட்ட 14 க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில், மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப்பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய கதிர்வீச்சிக்கு உட்பட்ட 14 கிராமங்கள், பேரூராட்சிகளில் பத்திர பதிவுக்கு ஆட்சேபனையில்லை என தற்போது அரசானையில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Tags: தமிழக செய்திகள்