Breaking News

BREAKING உத்தரகாண்ட் பனிபாறை உடைந்த வெள்ளம் வீடியோ !!! 150 பேர் மாயம்

அட்மின் மீடியா
0

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பனிச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 


உத்தரகாண்ட் மாநிலத்தின் ரெய்னி கிராமத்தில் இருந்து மின் நிலையம் அருகே திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. 

அதை தொடந்து தவ்லிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இதனால் ரிஷிகங்கா அணை உடைந்தது.

அதை தொடர்ந்து மின் நிலையம் பெரும் சேதத்தை சந்தித்தது. தெளளிகங்கா ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதனால், கங்கா நதியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது இதில், வேலை செய்து கொண்டு இருந்த சுமார் 150 -க்கும் மேற்பட்டோர் காணவில்லை என கூறப்படுகிறது. 

மேலும், இது தொடர்பாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் குழு, மாநில பேரிடர் குழு, அவசர கால சிகிச்சை குழுக்கள் ஆகியன சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கமாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 

 இதுவரை 9 பேர்களின் உடல்கள் மீட்கபட்டுள்ளன

 

 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback