Breaking News

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல்!

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்ததையடுத்து அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 



புதுச்சேரியில் கடந்த திங்கள்கிழமை அன்று சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமியின் அரசு தோல்வியடைந்ததை அடுத்து அவர் தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. 

நாராயணசாமியும் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார். 

அதையடுத்து  புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்து கடிதம் எழுதினார். அதனை ஏற்ற மத்திய அமைச்சரவை தற்போது புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Share this