Breaking News

அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன், தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் - சசிகலா பேட்டி

அட்மின் மீடியா
0

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வந்து கொண்டு இருக்கும் திருமதி சசிகலா அவர்கள்  தாம் தொடர்ந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக  தெரிவித்துள்ளார்.


பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து இன்று காலை பெங்களூரு தேவனஹள்ளி பண்ணை வீட்டிலிருந்து சசிகலா புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றார்

அவருக்கு தமிழக எல்லையான ஜூஜூவாடி செக் போஸ்ட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கிருஷ்ணகிரி அருகே சசிகலா தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்,

அடக்குமுறைக்கு என்றும் அடிபணிய மாட்டேன்  என்றும் கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. 

அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம்.

நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்.மேலும் அவர் பேசுகையில் ,எம் ஜி ஆர் வழிவந்த ஓர்தாய் வயிற்று பிள்ளைகள், ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும்.

ஜெயலலிதா நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.

அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்

மிகவிரைவில் உங்களை சந்திக்கிறேன்.சந்திக்கும்போது அனைத்தையும் கூறுகிறேன் என்று பேசினார்

Tags: தமிழக செய்திகள்

Share this