Breaking News

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு விடுமுறை நாட்களில் 50% தள்ளுபடி: முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 


அதாவது 0 – 2 கிமீ வரை கட்டணம் ரூ.10 எனவும், 2- 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக தற்போது உள்ள நிலையில், இனி 2- 5 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 4 -6கிமீ வரை, 6 முதல் 12 கிமீ வரை கட்டணம் ரூ.30 ஆகவும்,இருந்த நிலையில் இனி, 5 – 12 கிமீ வரை கட்டணம் ரூ.30 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 முதல் 18 கிமீ வரை கட்டணம் ரூ. 50 ஆக இருந்த நிலையில் இனி 12 -21 கிமீ வரை கட்டணம் ரூ.40 என வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

18 -24 கிமீ வரை கட்டணம் ரூ.60, 24 கிமீ மேல் கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 21 -32 கிமீ வரை கட்டணம் ரூ.50 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கட்டணத்திலிருந்து 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  





Tags: தமிழக செய்திகள்

Share this