Breaking News

ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

அட்மின் மீடியா
0

 ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

 

அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு சொந்தமான பயோமெடிக்கல் மேம்பாட்டு ஆணையத்துடன் (BARDA) இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை தொடங்கியது.  இறுதியில்  கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கட்ந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிவிதது.


இதன் மருத்துவ பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிராக இது மிகவும் பயனுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்க உணவுமற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ. அறிவித்துள்ளது.

அதனை தொடர்து த்ற்போது ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது


இந்த தகவலை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது அதிகார பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது 

அட்மின் மீடியா ஆதாரம்

hhttps://www.jnj.com/johnson-johnson-covid-19-vaccine-authorized-by-u-s-fda-for-emergency-usefirst-single-shot-vaccine-in-fight-against-global-pandemic

.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback