இனி விமானத்தில் லக்கேஜ் இல்லாமல் பயனம் செய்தால் விமான கட்டணத்தில் சலுகை
அட்மின் மீடியா
0
இனி விமானத்தில் லக்கேஜ் இல்லாமல் பயனம் செய்தால் விமான கட்டணத்தில் சலுகை வழங்க, விமான சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
விமான பயணத்தின் போது, பயணியர் கையில் சுமக்கும் பைகளை தவிர, கூடுதலாக எடுத்து வரும் பைகள், செக் இன் லக்கேஜ் என, அழைக்கப்படுகின்றன.இந்த செக் இன் லக்கேஜ் இன்றி, வெறும் கைப்பையுடன் பயணிக்கும் பயணியருக்கு, விமான கட்டணத்தில் சலுகைகள் அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
பயண சீட்டு முன்பதிவின் போதே, இது குறித்து தெரிவிக்க வேண்டும். அது, பயணச் சீட்டில் குறிப்பிடப்படும். பயணத்தின் போது, கூடுதல் பைகள் எடுத்து வராமல் இருந்தால் மட்டுமே, இந்த சலுகை பொருந்தும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்

