Breaking News

வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக மத்திய அரசு தயாரிக்கும் புதிய ஆப்!

அட்மின் மீடியா
0

மத்திய அரசு தற்போது தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் செயலியை போல புதிய இரண்டு செயலியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 



Samvad மற்றும் Sandes என பெயரிடப்பட்டுள்ள இந்த 2 ஆப்களும் முழுக்க முழுக்க பாதுகாப்புடனும், தகவல் திருட்டுக்கு இடம் கொடுக்காத வகையிலும் உருவாக்கபடுகின்றது

மேலும் இந்த ஆப்பை இந்திய அரசே உருவாக்குகிறது என்பதால் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

வாட்ஸ்அப் நிறுவனத்தில் சமீபத்தில் தனிநபர் தகவல்கள் குறித்த சர்ச்சை வெளிவந்திருந்த நிலையில், அதற்கு மாற்றாக இந்த செயலிகளை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. 




Tags: இந்திய செய்திகள்

Share this