Breaking News

#BigBreaking || தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கும் பணி நிரந்தம்.! உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த மாண்புமிகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள்

கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்ய அரசு நிரந்தரம் செய்ய வேண்டும்.

வழக்கு தொடர்ந்த தற்காலிக ஊழியர்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் சங்கங்களிலும் உள்ள தற்காலிக ஊழியர்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் தமிழக அரசு இன்னும் எட்டு வார காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Share this