Breaking News

கேரளாவில் 6 வயது மகனைக் கொன்ற தாய் - அல்லாஹ்விற்க்கு அர்ப்பணித்ததாக வாக்குமூலம்!

அட்மின் மீடியா
0

கேரள மாநிலம் பாலக்காட்டில் தனது 6 வயது மகனை அல்லாஹ்விற்க்கு தியாகம் செய்வதற்காக, தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 



இன்று அதிகாலை  பாலக்காடு மாவட்டம் புலக்காடு பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஷாஹிதா தனது 6 வயது மகன் அமீலை அல்லாஹ்விற்க்கு தியாகம் செய்வதற்காக கொலை செய்ததாக போலீஸ் கட்டுபட்டு அறைக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார்

உடனடியாக  போலிஸார் ஷாஹிதா வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது குளியலறையில் 6 வயது மகன் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்ததைக் கண்டனர் , 

ஷாஹிதாவின் கணவர் சுலைமான் மற்றும் இரண்டு குழந்தைகள் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தனர் , மேலும் இந்த கொலை குறித்து அவர்களுக்கு தெரியாது என்று கூறப்படுகிறது . 

அருகிலுள்ள மதரஸாவில் ஆசிரியராக இருக்கும் ஷாஹிதா மூன்று மாத கர்ப்பிணி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன . 

பாலக்காடு தெற்கு காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி  தாய் தனது குழந்தையை  அல்லாஹ்விற்க்காக தியாகம் செய்வதற்காக கொலை செய்ததாக கூறினார் . 

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  மேலும் மனநிலை பாதிப்பு உள்ளிட்ட வேறு ஏதாவது பிரச்சனை  உள்ளதா என விசாரித்து வருகின்றோம் என காவல்துறையின் கூறியுள்ளார்கள்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இஸ்லாத்தில் இல்லாத இது போன்ற செயல்களை செய்து சிலர் இது போல் செய்வது மிகவும் தவறானது இஸ்லாத்தில் இது போன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கதக்கது ஆகும்

Source:

https://www.timesnownews.com/india/article/shocking-sacrifice-to-please-allah-pregnant-madrasa-teacher-in-keralas-palakkad-slits-6-year-old-son-s-throat/717227




Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback