Breaking News

ஒரு மாதத்தில் 3-வது முறையாக உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை..

அட்மின் மீடியா
0

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் மூன்றாவது முறையாக ரூ.25 விலை உயர்வால் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.785-இல் இருந்து ரூ.810 ஆக அதிகரித்துள்ளது.






இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதமொருமுறை நிர்ணயிக்கப்படும்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணி க்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றனர்.


இந்நிலையில், வீட்டிற்கு வினியோகிக்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ. 25 அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரியில் 3ஆம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback