Breaking News

+2 பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

அட்மின் மீடியா
0

  +2 பொதுத் பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் நாளை முதல் மார்ச் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

 


 

கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதித் தேர்ச்சி பெற்ற / பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். 

 

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் மே 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் விரும்பும் தனித் தேர்வர்கள், 26.02.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 06.03.2021 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறைசேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினைப் பதிவு செய்துகொள்ளலாம். 

 

தட்கல் முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள் மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 08.03.2021 மற்றும் 09.03.2021 ஆகிய இரு நாட்களில் அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- சிறப்புக் கட்டணமாகச் செலுத்தி ஆன்லைனில் தட்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

 

பள்ளிகல்விதுறை அறிவிப்பை பார்க்க:

https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1614258043.pdf

Tags: தமிழக செய்திகள்

Share this