Breaking News

சவூதியில் கொரோனாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிப்பு..!!

அட்மின் மீடியா
0

சவூதி அரேபியாவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து  சவூதி அரசானது மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவித்திருந்தது.  இந்த கட்டுபாடுகள் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கபட்டுள்ளதாக  தற்பொழுது சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 


தற்பொழுது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் 

சமூக நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 20 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

அனைத்து பொது பொழுதுபோக்கு மற்றும் நிகழ்வுகள் நடைபெற தடை 

 சினிமாக்கள், உணவகங்கள், மால்கள் அல்லது பிற பொது இடங்களில், ஜிம்கள் மற்றும் விளையாட்டு மையங்களில் உள்ள உட்புற பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் விளையாட்டு பகுதிகள் மூடப்படும்.

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback