Breaking News

வங்கி ஊழியர்கள் மார்ச் 15, 16 இரண்டுநாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இந்தியாவில் இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்வதை கண்டித்து இந்தியாவின் 9 வங்கி ஊழியர்கள் அமைப்பு மார்ச் 15 மற்றும் 16ஆம் தேதி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.



பிப்ரவரி 1 -ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பொதுத்துறை வங்கியின் சுமையைக் குறைக்க இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்யப்படும் என்றும், அதனை தனியார்மயமாக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


இந்த அறிவிப்புக்கு, இந்தியாவின் 9 வங்கி ஊழியர்கள் அமைப்புகளின் தலைமை அமைப்பான The united forum bank union  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 


மேலும், 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வரும் மார்ச் 15 மற்றும் 16ஆம் தேதி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும், 13-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், அடுத்து வரும் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. 

source


Tags: இந்திய செய்திகள்

Share this