டிரெண்ட் ஆகும் Telegram : டெலகிராம் பயன்கள்: எப்படி பயன்படுத்துவது? | முழு விளக்கம்
அனைவருக்கும் whatsapp மற்றும் facebook பற்றி தெரியும், ஆனால் telegram என்றால் என்ன என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் உங்களுக்கு தெரியுமா வாட்ஸப்பை விட டெலகிராம் சிறந்தது என்று டெலகிராமிலும் வாட்ஸப் போல் chat செய்யலாம்,photo, video, location, file,என எந்த media file யும் telegram மூலம் அனுப்பலாம். மேலும் டெலகிராமில் group உருவாக்கலாம் மற்றும் channel create செய்யலாம்
மேலும் Telegram ஒரு cloud computing சேவையாகும் இதன் காரணமாக டெலகிராமின் பயன்பாட்டின் நீங்கள் உங்கள் டெலகிராமை டிலைட் செய்துவிட்டு மீண்டும் புதியதாக இன்ஸ்டால் செய்தால் முன்பு நீங்கள் உபயோகித்த அனைத்து செய்திகள், படங்கள், வீடியோக்கள் என உங்களுடைய முக்கிய பதிவுகள் அனைத்தும் அழியாமல் எத்தனை ஆண்டு வேண்டுமானாலும் பாதுகாப்பாக இருக்கும். Whatsapp ல் அனைத்துமே local storage என்பதால், மொபைல் போனை format செய்தாலோ , மொபைல் தொலைந்துபோனாலோ அல்லது பார்மட் செய்தாலோ அதில் எதுவும் திரும்ப பெற முடியாது
மேலும் ஒரு telegram account-ஐ வைத்து ஒரே நேரத்தில் Google Android, Apple iOS, Windows Mobile OS, Google Chrome OS, Windows, Linux, மற்றும் Web Version உள்ளிட்ட வெவ்வேறு இயங்குதளத்திலும், Desktop, Laptop, Smartphone, Tablet உள்ளிட்ட வெவ்வேறு சாதனத்திலும் உபயோகிக்க முடியும்.
Telegram ல் குழுக்களை Groups மற்றும் Channels என்று இரண்டு வகையாக அமைக்கலாம்.
டெலகிராம் குரூப்பில் 200 நபர்கள் வரை அதிகபட்சம் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால், Telegram Channel களில் நீங்கள் எத்தனை ஆயிரம் பேரை வேண்டுமானாலும் இனைத்து கொள்ளலாம் என்பது இதன் தனி சிறப்பு
மேலும் டெலகிராமில் உங்கள் சேனலுக்கு என்று உள்ள பெயரை வேறு யாரும் பயன்படுத்தமுடியாது நீங்கள் நிரந்தர பெயர் செட் செய்து கொள்ளமுடியும். மேலும் Channel ல் அதை create செய்தவர் மட்டுமே பதிவுகள் போட முடியும். உறுப்பினர்கள், பதிவுகளை பார்வையிட்டு, மற்ற குழுக்களில் வேண்டுமானால் Forward செய்யலாம்.
மேலும் நீங்கள் டெலகிராமில் வாய்ஸ் கால், மற்றும் வீடியோ கால் செய்யலாம் பிறகு என்ன உடனே டெலகிராம் டவுன்லோடு செய்து உபயோகபடுத்துங்க
டெலகிராம் ஆப் டவுன்லோடு செய்ய
https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger&hl=ta&gl=US
அட்மின் மீடியாவின் டெலகிராம் குருப்பில் இணைய
Tags: தொழில்நுட்பம்