Breaking News

கூகுள் பே பயனர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. Scratch card scratch செய்து 400 முதல் 4000 வரை பெறுங்கள். என்ற செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கூகுள் பே பயனர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. Scratch card scratch செய்து 400 முதல் 4000 வரை பெறுங்கள்.என்று  ஒரு லிங்கை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது


முதலில் இது போன்ற தகவல்களை எந்த நிறுவனமாக இருந்தாலும் ஆதாரபூர்வமாக தெரிவிப்பார்களே தவிர இது போன்ற லிங்க்குகள் மூலமாக அனுப்ப மாட்டார்கள்.


இரண்டாவது இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்.


மூன்றாவதாக எந்த ஒரு நிறுவனமும் சோஷல் நெட்வேர்கில் இது போன்ற linkயை அனுப்பாது. அந்த வெப்சைட்டில் நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றாலே தெரியும் இது ஒரிஜினல் கிடையாது அந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவல் வந்து நீங்க 21 வாட்ஸ் குருப்புக்கு அனுப்புங்க என வரும் நீங்க்லும் நம்பி அனுப்புங்க திரும்ப போனாலும் ஒன்றும் இருக்காது நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அஞ்சு பேரு திரும்ப அடுத்த முறை இப்படியேதான் இருப்பாங்க


ஆனால் ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற  முழுக்க முழுக்க  பொய்யான செய்திகளால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மை.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback