Breaking News

FACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கொரோனா தடுப்பு ஊசி போடுவது போல் நடித்த மருத்துவர்கள் என்று  ஒரு வீடியோவை ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ  கர்நாடக மாநிலம் தும்கூரில்  நடந்தது ஆகும் 

மேலும் அந்த இருவரும் மாவட்ட நல்வாழ்வு அதிகாரி நாகேந்திரப்பா மற்றும் மாவட்ட சுகாதார பயிற்சி மையத்தின் முதல்வர் மருத்துவர் எம்.ரஜனி ஆவர். 

உண்மையில், அவர்கள் இருவரும் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் ஆனால் அவர்கள் தடுப்பூசி போடும்போது அங்கு பத்திரிகையாளர்கள் இல்லை அதன்பிறகு  பத்திரிகையாளர்கள் வந்து ஊசி போட்டுக்கொள்வது போல போஸ் கொடுக்கும்படி கேட்கவே, அவர்கள் இருவரும் போஸ் கொடுத்தார்கள் இது தான் உண்மை 

ஆனால் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுக்கும் போது அதனை யாரோ வீடியோ எடுத்து பொய்யாக பரப்பி வருகின்றார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.thenewsminute.com/article/tnm-fact-check-tumakuru-medical-officers-did-not-pretend-take-vaccine-141927

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback