Breaking News

BREAKING NEWS: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். 

ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டி வழக்கும் தொடர்ந்தார் ஆனால் முறைகேட்டிற்ற்க்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

இந்நிலையில் இன்று ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றிகையிட்டு கடும் வன்முறையில் ஈடுபட்டனர்.ட்ரம்ப் ஆதரவாளர்கள் தடுப்புகளை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். இந்த வன்முறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த வன்முறைக்கு உலக தலைவர்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக பதவியேற்கிறார் ஜோ பைடன். 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback