BREAKING NEWS : தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்
ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி,
கோவை, தஞ்சாவூர், திருவாரூர்,
நாகை ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை,
திண்டுக்கல், மதுரை, தேனி,
சிவகங்கை, விருதுநகர்
உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்அறிக்கை
Tags: வேலைவாய்ப்பு