Breaking News

ட்ரம்புக்கு எதிராக டிவிட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை தொடர்ந்து யூடியூப் சேனலுக்கும் தடை விதிப்பு

அட்மின் மீடியா
0

வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டதால் ஒரு வாரத்திற்கு ட்ரம்பின் Donald j.Trump என்ற சேனலுக்கு யூடியூப் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது

 


கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்ய கடந்த 7-ம் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாராளுமன்றத்தில் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த சமபவத்திற்கு வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வீடியோவை அதிபர் டொனால்டு வெளியிட்டதால் டிரம்ப் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டது.

இதையடுத்து சமீபத்தில் டிரம்ப் தன்னுடைய யூ-டியூப் சானலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். 

அந்த வீடியோ தங்களது கொள்கைகள், விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி யூ-டியூப் நிறுவனமும் Donald j.Trump என்ற டிரம்பின் சானலை தற்காலிகமாக தடை செய்துள்ளது. 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback