Breaking News

அமெரிக்க கேப்பிட்டல் கட்டிடத்தில் நுழைந்து டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; வீடியோ

அட்மின் மீடியா
0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி கேப்பிட்டல் கட்டிட வளாகத்துக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையை மீறி போராட்டக்காரர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதால் கேப்பிட்டல் கட்டிடம் பூட்டப்பட்டது. 

இன்று டிரம்ப் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் கண்டன பேரணிகளை நடத்தினர். இதில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். 


இந்த நிலையில்வாஷிங்டனில் உள்ள கேப்பிட்டல் கட்டிடத்தினை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் புகுந்து விட்டனர். 

இதையடுத்து கேப்பிட்டல் கட்டிடத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு, பல செனட் உறுப்பினர்கள் உள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். அமெரிக்க வரலாற்றில் இது போல ஒரு மோசமான நிகழ்வு நடைபெற்றது கிடையாது என்று அந்த நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன்

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு  ஜோ பைடன், ஒபாமா, போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் தனது ஆதரவாளர்கள் மூலம் டொனால்ட் ட்ரம்ப் வன்முறையை தூண்டி விட்டதாக தலைவர்கள் குற்றச்சாட்டு

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback