Breaking News

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி?

அட்மின் மீடியா
0

இந்திய தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் தேதி  மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை டிஜிட்டல் வோட்டர் ஐடி)திட்டத்தை  அறிமுகப்படுத்துகிறது     

வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளவர்கள், தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து பழைய வாக்காளர்களுக்கு நாளை முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. 

இதனை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   



பிப்.,1 முதல், அனைத்து வாக்காளர்களுக்கும், 'இ - இபிக்' பதிவிறக்கிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பெற முதலில் நீங்கள் https://voterportal.eci.gov.in/ அல்லது https://nvsp.in/Account/Login இந்த இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். 

இந்தத் தளத்தில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக உங்கள் மொபைல் நம்பர்  கொண்டு ஒரு கணக்கைத் துவங்க வேண்டும். 

கணக்கைத் துவங்கிய பின்பு லாக் இன் செய்த உடனேயே உங்கள் கணக்கில் டவுன்லோடு E-EPIC (Electronic Electoral Photo Identity Card) என்ற ஆஃப்ஷன் இருக்கும். இதைக் கிளிக் செய்ய வேண்டும்.


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback