Breaking News

சர்வதேச விமான போக்குவரத்து தடை நீக்கம் சவூதி அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
உருமாறிய கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரு வாரங்களுக்கு முன்பு அனைத்துலக விமானச் சேவைகளை ரத்து செய்த சவூதி அரேபியா அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதாக இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளது. 



ஆனால், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் சவூதி அரேபியாவுக்கு வருவதற்கு முன்பு வேறொரு நாட்டில் 14 நாட்களுக்குத் தங்கி, கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 


அந்த நாடுகளிலிருந்து வரும் சவூதி அரேபிய குடிமக்களுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், நாடு திரும்பிய பிறகு 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்; பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். 




Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this