Breaking News

இனி வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புவது போல் பணம் அனுப்பலாம் நடைமுறைக்கு வந்தது வாட்ஸப் பேமண்ட்

அட்மின் மீடியா
0

 

வாட்ஸ் அப் செயலி மூலம் பணம் அனுப்பும் வாட்ஸ் அப் பேமெண்ட் வசதி இந்தியாவில்  செயல்பாட்டுக்கு வந்தது




தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா விடம் இருந்து இதற்கான அனுமதி கிடைத்த நிலையில் இந்த முறை  நடைமுறைக்கு வந்துள்ளது. 

இனி சுலபமாக மெசேஜ் அனுப்புவது போல பணம் அனுப்பலாம், இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வாட்ஸ் அப் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்

பணம் அனுப்புவது மட்டுமின்றி பண பரிமாற்ற விவரங்கள், முந்தைய பரிமாற்ற தகவல்கள் உள்ளிட்டவைகளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.


 


வாட்ஸ்அப் பே அம்சத்தை இயக்குவது எப்படி?- 

 

முன்னதாக பிளே ஸ்டோருக்கு சென்று உங்கள் வாட்ஸப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்

உங்கள் வாட்ஸாப்பில் மேற்பகுதியில் வலப்பக்கம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

அதில் உள்ள Payments பகுதியை கிளிக் செய்யவும்.

உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பதிவிட்டு சரிபார்த்துக்கொள்ளவும்.

 உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும், வாட்ஸாப் எண்ணும் ஒரே எண்ணாக இருத்தல் வேண்டும்.

இப்போது வாட்ஸாப் பரிவர்த்தன சேவையுடன் உங்கள் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுவிடும்.

அடுத்து காண்டாக்ட்டில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்- 

அடுத்து வாட்ஸ்அப் செயலியின் சாட் பாக்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஷேர் ஃபைல் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

அதில்  பேமெண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

பின் அனுப்ப வேண்டிய தொகையை பதிவிட்டு யுபிஐ விவரங்களை உள்ளீடு செய்தால் பணம் அனுப்பப்பட்டு விடும்

 

 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback