வாட்ஸப்பில் இருக்கும் இந்த அம்சங்கள் சிக்னலில் இல்லை என்பது தெரியுமா உங்களுக்கு ?
வாட்ஸப்பில் இருக்கும் இந்த அம்சங்கள் சிக்னலில் இல்லை என்பது தெரியுமா உங்களுக்கு ?
காண்டாக்ட்டில் இருக்கும் ஒருவர் ஆன்லைன் வந்தால் தெரியாது
வாட்ஸப்பில் நம் காண்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் ஒருவர் ஆன்லைனில் ஆன்லைனில் இருக்கும்போது வாட்ஸ்அப் அதை Online என்று குறிப்பிடும். ஆனால் இந்த அம்சம் சிக்னலில் இல்லை
ஸ்டேட்டஸ்
நாம் நம் வாட்ஸப்பில் பலவித ஸ்டேட்டஸ் வைப்போம் அனால் அந்த ஸ்டேட்டஸ்களை வைக்கும் அம்சம் சிக்னல் ஆப்பில் கிடையாது.
ஸ்டார் மெசேஜ் அம்சம்
நாம் விரும்பும் எந்த மெசேஜையும் சாட்டில் ஸ்டார் செய்து சேமித்து வைக்க முடியும் ஆனால் இந்த செயல்பாடு சிக்னலில் கிடையாது.
வால்பேப்பர் அம்சம்
வாட்ஸ்அப் சமீபத்தில் கஸ்டம் வால்பேப்பர்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் வெவ்வேறு சாட்களுக்கு வெவ்வேறு வால்பேப்பரை செட் செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சம் சிக்னல் ஆப்பில் கிடையாது.
வாட்ஸ் அப் பேமண்ட்
வாட்ஸ்அப் பேமண்ட் அம்சம் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பீட்டா வெர்ஷனாக வெளிவந்தது. வாட்ஸ்அப் வழியாக பணம் அனுப்பவும் பெற பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கை வாட்ஸ்அப் அக்கவுண்ட் உடன் சேர்க்கலாம் ஆனால் இந்த அம்சம் சிக்னல் ஆப்பில் கிடையாது
லைவ் லொக்கேசன்
சிக்னல் ஆப் ஆனது லோக்கேஷனை ஷேர் செய்யும் அம்சத்தை கொண்டுள்ளது தான். ஆனால் அது வாட்ஸ்அப்பை போல லைவ் லோக்கேஷனை போல் இல்லை
அட்மின் ஒன்லி
வாட்ஸ்ப்பில் மிக முக்கியமாக குருப்பில் அட்மின் மட்டும் மெசஜ் போடுவது போல் செட் செய்து விட்டால் போதும் வேறு யாரும் அதில் எதையும் ஷேர் செய்யமுடியாது ஆனால் இந்த அம்சம் சிக்னல் ஆப்பில் இல்லை
ஷேர் செய்யும் வசதி:
வாட்ஸப்பில் நாம் ஏதாவது ஒரு செய்தியினை 5 குருப்பிற்க்கு ஷேர் செய்யலாம் ஆனால் சின்கல் ஆப்பில் அது கிடையாது
Tags: தொழில்நுட்பம்
