Breaking News

"சமஸ்கிருதம் பிடிக்கலைன்னா... வேற சேனல் மாத்திக்கோங்க" உயர் நீதிமன்றம் கருத்து !

அட்மின் மீடியா
0

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்தி வாசிக்கத் தடை கோரி வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞருக்கு, சமஸ்கிருதச் செய்தி பிடிக்காவிட்டால் அந்த நேரத்தில் வேறு சேனலை மாற்றிக்கொள்ளுங்கள் எனத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.



தமிழகத்தில் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் அகில இந்திய வானொலி நிலையங்களில் சமஸ்கிருத மொழியில் செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு அண்மையில் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

அதில் தூர்தர்ஷனில் தினமும் காலை 7.15 மணி முதல் இரவு 7.30 மணி வரை சமஸ்கிருத மொழியில் செய்திகள் ஒளிபரப்பாகும். இந்த சமஸ்கிருத செய்திகளை அனைத்து மாநிலங்களும் ஒளிபரப்ப வேண்டும் என்றும், சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் வாராந்திர செய்தி தொகுப்பை ஒளிபரப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சமஸ்கிருத செய்தி சேனல் பிடிக்கவில்லை எனில் மனுதாரர் வேறு ஒரு சேனலை மாத்திக்கலாம். இல்லையேல்  டிவியையே அணைத்து விடலாம் என நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback