Breaking News

பிளே ஸ்டோரிலிருந்து லோன் அப்ளிகேஷன்களை நீக்கியது கூகுள்!

அட்மின் மீடியா
0

தனிநபர் கடன் வழங்கும் செயலிகளின் நடவடிக்கைகள் குறித்து அதிகளவில் புகார்கள் எழுந்துள்ள நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரிலிருந்து இத்தகைய பல செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.



இந்த அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்கியவர்களை அதிகவட்டி கேட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் காட்டுகின்ற அடாவடியால் பலரும்  தர்ம சங்கடத்தில் உள்ளதாக பலரும்  இணையத்தில் புகார்கள் அளித்து வருகின்றார்கள்

அதையடுத்து பயனர்களின் பாதுகாப்பு கொள்கையை மீறிய தனிநபர் கடன் கொடுக்கும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது. 


மொபைல் போன் அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கையை கூகுள் மேற்கொண்டுள்ளது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback