Breaking News

அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர் ட்ரம்ப் தான் “ - நடிகர் அர்னால்ட் வீடியோ

அட்மின் மீடியா
0

ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை  அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர் என விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் 

நியாயமாக நடைபெற்ற தேர்தல் மற்றும் அதன் முடிவின் மீதும் நம்பிக்கை கொள்ளமால் மக்களிடம் பொய் உரைத்து தவறான வழியில் வழிநடத்துகிறார். அதிபர் ட்ரம்ப் 

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் நாஜி தாக்குதலுக்கு ஒப்பானது நாஜிக்கள் 1938-ல் யூதர்களுக்கு எதிராக வெறியாட்டத்தை மேற்கொண்டனர், அதேபோல், கடந்த புதன்கிழமை கலவரத்தில் ஈடுபட்ட டிரம்பின் ஆதரவாளர்கள் நாஜிக்கு சமமானவர்கள் என தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான அதிபர் அவர். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர் விரைவில் செல்லா காசாக மாற உள்ளார். என அவர் தெரிவித்துள்ளார். 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this